முனைவர் ப.ஸ்டாலின்
www.stalinroshan.blogger.com
Wednesday, 11 December 2019
Thursday, 26 September 2019
Friday, 2 August 2019
சிலப்பதிகாரத்தில் இசை
முனைவர் ப.ஸ்டாலின், எம்.ஏ.,பிஎச்.டி.,டி.லிட்
தகவல் அலுவலர்,
உலகத் தமிழ்ச்
சங்கம்,
மதுரை.
சிலப்பதிகா
முத்தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் இசைச் செய்திகள் நிறைந்த ஒரு கருவுலமாகும்.
முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் இரண்டறக் கலந்த சிலப்பதிகாரத்தின் பெருமையை நன்கு உயர்த்தியுள்ளது.
அரங்கேற்று காதை, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, கானல்வரி ஆகிய பகுதிகளில் காணப்படும்
செய்திகள் இசை இலக்கணம் தொடர்பானவை. இவற்றைத் தவிர மங்கல வாழ்த்துப்பாடல், மனையறம்
படுத்த காதை, கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை
ஆகிய பகுதிகளில் இசைப்பதற்குரிய பாடல்கள் நிறைந்துள்ளன. காப்பியத்தின் முதல் காதையே
மங்கல வாழ்த்துப் பாடல் என அழைக்கப்படுகின்றது. இதன் தொடக்கப் பகுதி நான்கு சிந்தியல்
வெண்பாவால் ஆனது. இவை அனைத்தும் இசைக்கக் கூடிய இனிமையான பாடல்களாகும்.
மேலும்
கானல் வரிப்பாடல்கள், வேட்டுவ வரிப்பாடல்கள், ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள், குன்றக்
குரவைப்பாடல்கள் என்பன கூத்துடன் கலந்த அருமையான பாடல்கள். அக்கால இசை மரபை வெளிக்கொணரும்
பாடல்களாக அவை காணப்படுகின்றன. மக்கள் மத்தியில் பெரு வழக்காக உள்ள கந்துகவரி, ஊசல்வரி,
வள்ளைப் பாட்டு, என்பன நாட்டுப்புற மரபைப் பின்பற்றி எழுதப் பெற்றவைகளாகத் தேன்றுகின்றன.
'பாவைமார் ஆரிக்கும் பாடலே
பாடல்
(29,
26, 5)
என்ற
அடி வெள்ளைப்பாட்டு பாவையார் மகிழ்ந்து பாடும் பாடல் என்ற குறிப்பைத் தருவதாகும்.
'குடங்கை நெடுங்கண்பிறழஆடாமோ ஊசல்
(29;
23; 4)
'கார்
செய் குழலாட ஆடாமோ ஊசல்
(29;
24; 4)
மின்
செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல்
(29;
25; 4)
போன்ற
அடிகள் மங்கையர் மகிழ்ந்துபாடும் ஊசல் பாட்டை நினைவுபடுத்துவனவாகும். சாதாரண மக்களின்
இசை வழக்குகளை நன்கு அறிந்த இளங்கோஅடிகள் முறைப்படுத்தப் பெற்ற இசை முறைமை, விதிமுறைகளையும்
சிறப்பாக அறிந்து நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் பல இசைக் குறிப்புகளையும் தந்துள்ளார்.
ஆடலும்
பாடலும் கலைநிலையிலும் அமைப்புமுறையிலும் இருவேறுபட்ட கலைகளாயினும் உணர்விலும் உறவு
நிலையிலும் இரட்டைக் கலைகளாக கருதப்படுகின்றன. அவை தனித்து இயங்குவதைவிட இணைந்து இயலும்
போது பயனும் சுவையும் மிகுதியான இன்பத்தை தரவல்லதாகையால் அடிகளார் பல இடங்களில் இவ்விரு
கலைகளின் இணைவையும் இன்பக் கலப்பையும் இயல்பாகவும் இனிதாகவும் விளக்கிக் காட்டுகின்றார்.
அரங்கேற்றுக்காதையில்
இசை யாசிரியன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழாசிரியன், கவிஞன் ஆகியோரின் இலக்கணம்
மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆடலாசிரியன் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள் ஆடல்,
இசை ஆகிய இரு கலைகளிலும் பயிற்சி தேவை என வலியுறுத்திக் கூறுகின்றார்.
இருவைக்
கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக்
கூத்தும் விலக்கினிற் புனர்த்து
பதினோராடலும்
பாட்டும் கொட்டும்
விதிமாண்
கொள்கையின் விளங்க அறிந்தால்
ஆடலும்
பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய
நெறியின கொளுத்தும் காலை
(சிலப்;
3; 12-17)
எனக் கூறும் இளங்கோவடிகள்
தேசி, மார்க்கம் ஆகிய இருவகை கூத்துக்களின் அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டு மெனவும்
வலியுறுத்துகிறார்.
"யாழும்
குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல்
தண்ணுமை ஆடலொடிவற்றின்
இசைந்த
பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும்
ஆடற்கம் உரிப்பொருள் இயக்கி"
(3;
26-29)
என்ற
அடிகள் வாயிலாக இசையாசிரியனுக்குரிய இலக்கணத்தை கூறுகின்றார். "ஆடலுக்குரிய பாடல்களை
நன்கு உணர்ந்து இசை கூட்டும் ஆசிரியர் இசையுணரும் ஆற்றலுடையவராகவும் இசைபுணர்க்கும்
திறமையுடையவராகவும் இருத்தல் வேண்டும். யாழ்ப்பாடல், குழல்பாடல் (வங்கியப்பாடல்), இருவகையான
தாளங்களின் கூறுகள், மிடற்றுப்பாடல், தண்ணுமையின் தாளவிசைக்கூறுகள் அனைத்தையும் நன்கு
தெரிந்திருத்தல் வேண்டும். இருபிரிவு பாடல்களுக்குப் பொருளான இயக்கம் நான்கினையும்
(முதனடை, வாரம், கூடை, திரள்) அறிந்து இசை புணர்த்தல்
வேண்டும். மேலும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கு
வகையிலும் இசை இணைவிக்கும் திறமை வேண்டும்.
தண்ணுமை
ஆசிரியன் பற்றி கூறுமிடத்து அனைத்து கூத்துக்கள், பாடல்கள், இசைகள், ஆகியவற்றின் கூறுபாடுகளை
அறிந்திருப்பதுடன் இருவகைத் தாளங்கள், ஏழுவகைத் தூக்குகள் ஆகியவற்றை அறிந்திருத்தல்
வேண்டும். யாழ், குழல், வாய்ப்பாட்டு என்பவற்றுடன் தண்ணுமை இணைந்திருத்தல் வேண்டும்.
மற்ற கருவிகளுடன் சேர்ந்து அவற்றின் குறைநிரப்பி, அக்கருவிகளின் மிகையடக்கி, ஆக்குமிடத்திலும்
அடக்குமிடத்திலும் இசைக்கேற்ப வாசித்தல் தண்ணுமை யோனின் சிறப்புஎனக் கூறுகிறார். ஆடல்,
பாடல், இசை, தமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் ஆகிய ஒன்பது கூறுகளைப் பற்றியும்
அவற்றின் நுணுக்கங்கள் பற்றியும் அறிந்து தண்ணுமை ஆசிரியர்கள் தொழிற்படவேண்டும் என
வலியுறுத்திக் கூறுகிறார்.
பண்ணிசைக்
கருவிகளில் யாழை அடுத்து மிகச் சிறப்புடன் விளங்கும் குழலைப் பற்றியும் விளக்கமாக இளங்கோவடிகள்
கூறுகின்றார். பல வகையான குழல்கள் பற்றியும் குழலை எவ்வாறு வாசிக்கவேண்டும் என்றும்
விளக்கம் அளிக்கின்றார். இளங்கோவின் காலத்தில் யாழ்மிகச்சிறந்த இசைக் கருவியாக மதிக்கப்பட்டது.
அதில் இசையமைத்துப் பண்படைத்துக் காட்டும் பாங்கினை மிக விளக்கமாக சிலப்பதிகாரத்தில்
கூறுகின்றார். யாழாசிரியனது திறமைகளை விளக்கும்போது அக்காலப் பண்ணிசை வழக்கங்களையும்
விளக்குகிறார். கானல்வரியில் மாதவி யாழிசை மீட்டுவதை மிக விரிவாக விளக்குகிறார்.
பண்ணல்
பரிவட்டனை ஆராய்தல் தைவரல்
கண்ணிய
செலவு விளையாட்டுக் கையூர்
நண்ணிய
குறும் போக்கென்று நாட்டிய
எண்வகையால்
இசையெழீஇப்
பண்
வகையால் பரிவு தீர்ந்து
மரகத
மணித் தாள் செறிந்த மணி காந்தன் மெல்விரல்கள்
பயிர்
வண்டின் கிளை போலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல்
வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன்
உருட்டல் நெருட்டல் அள்ளல்
எருடைப்
பட்டடையென இசையோர் வகுத்த
எட்டுவகையி சைக்கரணத்துப்
பட்டவகைதன்
செவியினோர்த்
தேவலன்பின்
பாணியாதெனக்
கோவலன்
கையாழ் நீட்ட அவனும்
(சிலப்;
7; 5-18)
இவ்வாறு
யாழ் மீட்டுவதற்குரிய விதிகளைக் குறிப்பிடுகிறார்.
கானல்வரியில்
பலவகையான வரிப்பாடல்களை எழுதியுள்ளார். வரி என்பது பாடல், ஆடல் ஆகிய இரு கலைகலையும்
குறிக்கும்.வேட்டுவ வரி ஆடலையும் கானல்வரி பாடலையும் குறிப்பிடுகின்றன. வரிப்பாடல்கள்
யாழ் மீட்டி அதன் இசைக்குத் தக்கவாறுபாடப்படுவதாகத் தோன்றுகிறது.
சங்கப்
பாடல்களில் வீணை என்ற இசைக் கருவி பற்றிய குறிப்பு இல்லாவிடினும் சிலப்பதிகாரத்தில்
வீணை பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.
நாரதன்
வீணை நயந்தெரி பாடலும்
தோரிய
மடந்தை நயந்தெரி பாடலும்
(:
6; 18-23)
மேலும்
வேனிற் காதையில் குரல் - இளி முறையில் (ஸ்-ப முறை) பன்னிரு ஸ்வர நிலைகளை பழந்தமிழ்
மக்கள் எவ்வாறு கண்டு பிடித்தனர் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"வரன்
முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழை
முதலாகவும் உழையிறாகவும்
குரல்
முதலாகவும் குரலிறாகவும்
(வேனிற்
காதை 36-38)
ஆய்ச்சியர்
குரவைக்கூத்து நிகழ்ச்சியில் எவ்வாறு மாதரி ஏழு பெண்களை நிறுத்தி அவர்களுக்கு குரல்,
துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்டாள் என விவரித்துள்ளார். மேலும்
ஒரு இயக்கிலுள்ள குரல், துத்தம், கைக்கிளை முதலிய ஒவ்வொரு ஸ்வரத்தையும் குரலாக அதாவது
ஆதாரசுருதியாக வைத்து ஏழு பெரும்பாலைப் பண்களை வகுத்தனர். இம்முறை பண்ணுப் பெயர்த்தல்,
எனப்படுகின்றது. தற்காலத்தில் கிரகபேதம் என்றும் மேற்கத்திய இசையில் Model Shift
of Tonic முறை எனவும் அழைக்கப்படுகின்றது. இம்முறை பற்றி இளங்கோவடிகள் கானல் வரியில்
தீத்
தொடைச் செவ்வழிப் பாலை எழீஇப்
பாங்கினில்
பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள்
(கானல்வரி
அடி 49, 5O)
எனக்
கூறியுள்ளார்.
பல
இசை ஆய்வாளர்கள் சிலப்பதிகாரப் பாடல்களை இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் எஸ்.இராமநாதன் சிலப்பதிகாரத்து ‘ஆய்ச்சியர் குரலைப் பாடல்கள் (1968) என்னும்
நூலில் ஆய்ச்சியர் குரவைப் பகுதியிலிருந்து சில பாடற் பகுதிகளை எடுத்து மோகனம், மத்திய
மாலதி, ஹிந்தோளம், சுத்தஸாவேரி, சுத்த தன்யாஸி ஆகிய இராகங்களில் இசையமைத்துள்ளார்.
சிலப்பதிகாரத்தின் யாப்பமைதியை ஆராய்ந்த டாக்டர் ந.வீ.செயராமன் 6 இசைக் கூறாகப் பிரித்து
(மங்கல வாழ்த்து, கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்
காதை) 56 இசைப்பாடல் வகைகளை இனங்கண்டு அப்பாடல்களின் யாப்பினை ஆராய்ந்துள்ளார். பேராசிரியர்
டாக்டர் எஸ்.சீதா சிலப்பதிகாரத்தில் ஒன்பது சுவைகளை உணர்த்தும் வகையில் பாடல்களைத்
தெரிந்தெடுத்து ஒன்பது இராகங்களில் இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளார்
பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அவர்களும் 'சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப் பாடல்கள்
என்னும் நூலில் சில பாடல்களை ஸ்வரதாளப் படுத்தியுள்ளார்.
துணை நூற்பட்டியன்
1.
அங்கயற்கண்ணி.இ –சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்
2.
இராமநாதன்.எஸ் – சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்
3.
சேலம் செயலட்சுமி.எஸ் – சிலபத்தி காரத்தில் இசைச் செல்வங்கள்
4.
தனபாண்டியன்.து.ஆ – இசைத்தமிழ் வரலாறு பகுதி1
5.
பெருமாள் ஏ.என் - தமிழர் இசை :
Wednesday, 24 April 2019
Thursday, 20 December 2018
Sunday, 1 October 2017
பழந்தமிழரின் நீர் நிலைகள்
01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.
05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
12. *கடல்* - (Sea) சமுத்திரம்.
13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. *கால்* – (Channel) நீரோடும் வழி.
16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.
18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. *வாளி* (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.
39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.
நன்றி- முனைவர் ஆ. பூபாலன்
Thursday, 27 October 2016
தீபாவளி
முனைவர் ப.ஸ்டாலின்
தீபாவளி (சமக்கிருதம்: दीपावली)
அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுகின்ற ஓர்இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ்ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில
ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசைமுன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலானஆண்டுகளில் தீபாவளி
ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும்.கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத
17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின்
கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி
ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.[1]
நாடுகளில்
அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக
கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக்
கொண்டாடுகின்றனர்.
பெயர்க் காரணம்
'தீபம்'
என்றால் ஒளி,
விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும்
பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம்
செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு
தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
தோற்ற
மரபு
தீபாவளி
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக்
கூறுகின்றனர்.
·
புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான
நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார்.
பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட
வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன்
தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.[2]
·
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற
போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க
தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
·
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது
வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன்இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி
மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்
படுவதாக கருதப் படுகிறது.
·
ஸ்கந்த
புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில்
தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக
நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே
தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற
அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும்
இருக்கிறது.
நரகாசுரன் கதை
இரண்யாட்சன் என்ற அரக்கன் வேதங்களை
எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம்
நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட
பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன்
சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற
தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு
எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான்.
மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை
மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற
நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர்
தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை
ஓட்டும்படி பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர்
காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம்
கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன்
தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக்
கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது
என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின்
செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப்
படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில்
ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி
அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி
என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை
சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
சீக்கியர்களின் தீபாவளி
·
1577-இல்
இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே
சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி
கொண்டாடும்
முறை
தீபாவளி
அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர்
காலிலும் நலங்கு (மஞ்சளும்சுண்ணாம்பும் கலந்த
கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்)
செய்வர். நல்லெண்ணெயில் ஓமம்மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை
உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளி அன்று பாரம்பரிய
உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள்
விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக
பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர்.
தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும்.
அன்று இனிப்புக்கள் நிறைய
செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை
வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று
நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம்,
அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக
கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து
இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி
அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும்
பண்டிகை தீபாவளி.
தீபஒளித்
திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின்
நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை
தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிற
நாடுகளில் தீபாவளி
மேற்குநாடுகளில் தீபாவளி
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள்
போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும்,
வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும்
தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின்
கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.
Subscribe to:
Posts (Atom)
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...
-
உலகின் தொன்மையான் மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான் ...
-
மறைந்த தமிழ் நூல்கள் தலைச்சங்கம் இடைச் சங்க காலத்தில் , பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள் ப...

