தொல்காப்பியத்தின்
அடிப்படையில் சோதிடக்கலையில் சொல்லாக்க உத்திமுறைகள்
முனைவர் ப.ஸ்டாலின்
தமிழ் உதவிப் பேராசிரியர்
திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி
குறிஞ்சிப்பாடி. கடலூர் மாவட்டம்
தமிழ்த்துறை
பாரதிதாசன்
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
குரும்பலூர்.
பெரம்பலூர்- 621107
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தொல்காப்பியத்தின்
அடிப்படையில் சோதிடக்கலையில் சொல்லாக்க உத்திமுறைகள்
முனைவர் ப.ஸ்டாலின்
தமிழ் உதவிப் பேராசிரியர்
திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி
குறிஞ்சிப்பாடி.கடலூர் மாவட்டம்
தலைப்பு
“ தொல்காப்பியத்தின் அடிப்படையில் சோதிடக்கலையில் சொல்லாக்க உத்திமுறைகள் ”
முன்னுரை
பண்டையக்காலத்தில் சோதிடவியலுக்கு என்று தனியான நூல்கள் எதுவும் தமிழில்
இருந்ததாக தெரியவில்லை தமிழ் மக்கள் வாழ்க்கை
முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகப்பழைய
எழுத்து மூல ஆவணங்கள் இலக்கணங்களும். சங்க நூல்களேயாகும் பாடல்கள் எழுதியவர்கள்
பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் சோதிடவியல். வானியல் கோளியல் போன்ற துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை
எதிர்பார்க்க முடியாது எனினும் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய
பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்,அந்த வகையில் ”தொல்காப்பியத்தின் அடிப்படையில்
சோதிடக்கலையில் சொல்லாக்க உத்திமுறைகள்” பற்றியது இந்த ஆய்வு
ஆய்வுத் கட்டுரையின் நோக்கம்
தொல்காப்பியத்தின் அடிப்படையில்
சோதிடக்கலையில் சொல்லாக்க உத்திமுறைகள் – என்னும் இவ்ஆய்வு ஆனது தொல்காப்பியத்தில் காணப்படும் சோதிடவியல் தொடர்புடைய, வானியல், கோள்கள்.ஙநட்சத்திரம். காலம். மாதம் தொடர்பான சொற்கள் ஆகழ்ந்து
எடுத்து இன்றைய அறிவியல் தகவல்களுக்கும். ஆய்வு மாணவர்களுக்கும்,
ஆராய்ச்சியாளருக்கும் பயன்படும் வகையில் அமைவது இவ்வாய்வு ககட்டுரையின் நோக்கமாகும்.
உத்திமுறைகள் ( கருதுகோள் )
சூரியன், சந்திரன், நாள்,
கோள்கள், நட்சத்திரம், காலம் போன்ற
விண்பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான அறிவு சங்ககாலத்தில் தமிழ் மக்களுக்கு
இருந்தது. கனிப்புகள் மூலம் பெற்றுக்கொண்ட தரவுகளை வைத்தே இவ்வியக்கங்கள் தொடர்பான புரிந்துணர்வுகளை
அவர்கள் வளர்த்துக் கொண்டனர். புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடியவற்றுக்கு அப்பால், நிகழ்வுகளுக்கு
விளக்கங்களும் கொடுக்கப்பட்டன, இதுவே உத்திமுறைகள்.
சோதிடம்
சொல்விளக்கம்
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்
சோதிடக்கலையில்
சொல்லாக்க விளக்கம்
வானியல் வானிலுள்ள கோள்களுக்கும்,
பூமியிலுள்ள மக்களுக்கும் இடையேயுள்ள ஒருவிதத் தொடர்பை அறிவிக்கும் அறிவியலாகக் சோதிடச்
சாத்திரம் விளங்குகிறது.வேள்விகளை நடத்துவதற்குரிய நாளையும் நேரத்தையும் குறிப்பது
தான் வானநூல் என்று நம்பினர்.வானநூல் புலமை இன்றும் மக்களிடம் இருந்து வருகிறது.
நாளும் கோளும் இன்றைய வாழ்வியற் கூறுகளில்
எத்தனை அளவு முதன்மை பெற்று விளங்கினவோ அத்தனை அளவு சங்க காலத்திலும் முதன்மை பெற்று
விளங்கின இன்றைய வரலாற்றினை கானும்போழுது நாளும் கோளும் பிற நாட்டு மக்களிடத்தும் வாழ்வியற்
கூறாக விளங்கியதை அறியலாம். கிரேக்கர்கள் நல்ல நாள். நல்ல காலம் பார்த்துத்தான் உழவுத்
தொழிலில் ஈடுபடுவார்கள். விதை விதைத்தலையும். அறுவடையையும் நல்ல நாள் பார்த்துச் செய்ததைக்
கிரீஸ் வாழ்ந்த வரலாறு நமக்கு காட்டுகிறது. தொன்மை வாய்ந்த சீன மக்கள் இத்தகைய பழக்கங்களை
மேற்கொண்டிருந்தனர். அது போலவே பண்டைத் தமிழ் மக்களும் நாளும். கோளும். கிழமையும் பார்த்து
வாழ்ந்ததைக் காணமுடிகிறது.
தொல்காப்பியத்தில்
ஞாயிறு. திங்கள். ஆகிய கோள்கள் மட்டும் குறிக்கப் பெற்றுள்ளன.
காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை
தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு
திங்கள் சொல் என வருஉம் (தொல்.சொல்.கிளவி.57)
ஏனைய கோள்களைப்பற்றி குறிப்புகள்
அந்நாளில் இடம் பெறவில்லை
பாரிபாடல் 9 கோள்களைப் பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால்
தொல்காப்பியத்தில்
ஞாயிறு திங்க ளறிவே
நானே
கடலே
கானல் விலங்கே மானே
புலம்புறு
பொழுதே புள்ளே நெஞசே
அவையல
பிற நுதலிய நெறியான்
சொல்லுற
போலவுங் கேட்டுந போலவுங்
சொல்லியாங்
கமையு மென் மனார் புலவர் (தொல்.பொருள்.192)
நட்சத்திரங்கள்
தொல்காப்பியத்தில்
நட்சத்திரப் பெயர்கள் எவ்வெவ்வாறு பிற சொற்களோடு சேர்ந்து வரும் என்பதற்குக் கட்டும்
இலக்கணம் வானியல் கூறுகளில் பண்டையோர் பெற்றெடுத்த புலமையைக் காட்டும் எனலாம். பரணியான்
கொண்டன். சோதியான் கொண்டன். கோட்டையான் கொண்டான் என ஆன் சாரியை பெறும் இடத்தைச் சுட்டிச்
செல்வது
நாள்முன் தோன்றும் தொழில் நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஐயம் இன்றே
என்றும்
திங்களும் நாளும் முந்துகிளந்தன்ன (தொல்.எழுத்து.84)
என்று திங்கட் பெயரும். நாட்
பெயரும். குறிப்பிடுவதை நூற்பாக்கள் வழி நட்சத்திரம். நாள் பற்றிய சிந்தனைகள் தமிழருடைய
பழமைத் தன்மைக் காட்டுகிறது.
தொல்காப்பியர் இருபத்தேழு நட்சத்திர பெயர்களுக்கு புணர்ச்சி வழி கூறியுள்ளார்.
இவ் இருபத்தேழு நட்சத்திரங்கள் இகர. ஐகார. மகர எழுத்துக்கள் ஈறாகக் கொண்டு முடியும்
என்பார்.
இகர ஈறு கொண்டு முடியும் நட்சத்திரங்கள்
அசுவனி. பரணி. உரோகிணி. சோதி. பூரட்டாதி. உத்திரட்டாதி. ரேவதி (தொல்.எழுத்து.உயிர் மயங்கியல்.46)
என்றும்
ஐகார ஈறு கொண்டு முடியும் நட்சத்திரங்கள்
கார்த்திகை,திருவாதிரை.சித்திரை,கேட்டை (மேலது)
மகர ஈறு கொண்டு முடியும் நட்சத்திரங்கள்
மிருகசீரிசம், புனர்பூசம், பூசம், ஆயில்யம்,
மகம், பூரம், உத்திரம், அத்தம், விசாகம், அனுசம், மூலம். பூராட்டம், உத்திராடம், திருவோணம்,
அவிட்டம், சதயம்,
என்று
நாட் பெயர்க் கிளவி
மேற்கிளந் தன்ன
அத்தம் ஆன்மிசை வரைநிலை இன்றை
ஒன்றுமெய் கெடுதல்
என்மனார் புலவர்
(தொல்.எழுத்து.புள்ளி.மயங்கியல்
36)
என்று குறிப்பிடுகின்றார்.
எடுத்துக்காட்டு
அசுவினி - இ
கார்த்திகை -
ஐ
மிருகசீரிடம் - ம
சந்திரனுக்கும் மாதத்திற்கும் உள்ள தொடர்பு
தொல்காப்பியர் மாதத்தை திங்கள் என்றும்
குறிப்பிட்டுள்ளார். திங்கள். மதி என்றும் பெயர்கள் சந்திரனாகிய ஒரு கோளையும் குறிக்குமாகையால்
அச்சந்திரன் இயக்கத்தால் காலங்களுள் ஒன்றாகிய திங்கள் ( மாதம்) கணிக்கப்பட்டது.
சந்திரனைக் கொண்டு மாதங்கள் கணிக்கப்பட்டதால்
சந்திரனுக்கும் உரிய பெயர்களாகிய திங்கள் மதி என்ற பெயர்கள் மாதத்தைக் குறிக்கவும்
வழங்கப்பட்டன.
” திங்களும் நாளும் முந்து கிறந்தன்ன”
(தொல் எழுத்து.உயிர்
மயங்கியல்.84)
இது சந்திரனுக்கும். மாதத்திற்கும் உள்ள
தொடர்பை எடுத்துக்காட்டுகின்றார்
காலம்
தொல்காப்பியர் மாறி வரும் கால நிலை கண்டுணர்ந்து.
ஒர் ஆண்டினை
கார் -
மாசி, பங்குனி
கூதிர் - ஐப்பசி,
கார்த்திகை
முன்பனி - மார்கழி, தை
பின்பனி - ஆவணி, புரட்டாசி
இளவெனில் - சித்திரை,
வைகாசி
முதுவேனில் - ஆனி,ஆடி
என் காலத்தை ஆறு பருவங்களாக (மாதம்) பகுத்து பெரும் பொழுதுகள்
என்னும் பெயரால் வழங்கியுள்ளனர்
ஒரு நாள் என்னும் அளவினையுடைய காலத்தை
1.
சூரிய உதயத்திலிருந்து 10 மணி வரை காலை
2.
10 மணி முதல் 2 மணி வரை நண்பகல்
3.
2
மணி முதல் 6 மணி வரை எற்பாடு
4.
6 மணி முதல் 10 மணி வரை மாலை
5.
10 மணி முதல் 2 மணி வரை யாமம்
6.
2 மணி முதல் 6 மணி வரை வைகரை
என்று காலத்தை பிரித்து வரையறுத்துள்ளார்.
இப்படி தமிழ் மக்கள்
நாளும் கோளும் பார்த்து வாழ்ந்ததை தொல்காப்பியத்தின் வழி காணமுடிகிறது.
தொல்காப்பியத்தின் சோதிடகலைச்செற்கள்
பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள்
1. சூரியன் (ஞாயிறு
Sun) – ஆதவன்.
தரணி. தினமனி. தினகரன். பனிப்பகை
2.
சந்திரன் (திங்கள்
Moon) – அம்புலி.
குமுத நண்பன். களங்கன். குழவி. வேந்தன்
3. செவ்வாய் (Mars) – ஆரல். நிலமகன்.
அரிவன். அழல். குருதி
4. புதன் (அறிவன் Mercury)- பண்டிதன். புலவன். தேர்பாகன்.
கணக்கன். மேதை.
5.
குரு (வியாழன்
Jupiter) – அசைச்சன்.
அரசன்.ஆசான். அந்தணன். மறையோன்
6. சுக்கிரன் (வெள்ளி
Venus) - மழைக்கோள். பளிங்கு.
7. சனி (காரி Saturn) - கதிர் மகன். கரியவன். காரி. முடவன்
8. இராகு (நிழற்கோள்) - கரும்பாம்பு .
9. கேது (நிழற்கோள்
– கதி்ர்பகை.செம்பாம்பு
நட்சத்திரங்கள்
இவ்வாறு
தொல்காப்பியத்தில் காணப்படுகின்ற கோள்கள் பற்றிய செய்தி நட்சத்திரங்கள். சந்திரனுக்கும்
மாதத்திற்கும் உள்ள தொடர்பான செய்திகளை இக்கட்டுரையின் தொகுக்கப்பட்டுள்ளது
நன்றி
முனைவர் நா.ஜானகிராமன்
தமிழ்த் துறைத்தலைவர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்
கல்லூரி
குரும்பலூர். பெரம்பலூர்-
621107